"பேரிடர்களுக்கு பிறகு பிசியோதெரபிஸ்ட் தேவை அதிகரிப்பு" - பிரதமர் மோடி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை போன்ற மிகப்பெரிய பேரிடர்களுக்கு பிறகு, பிசியோதெரபிஸ்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபத்தில் நடைபெற்ற இந்திய பிசியோதெரபி அமைப்பின் தேசிய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். அதில் பேசிய அவர், பிசியோதெரபிஸ்ட் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். குடும்ப மருத்துவர்கள் இருப்பதை போல், குடும்ப பிசியோதெரபிஸ்ட் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் யோகாவின் அனுபவத்துடன் பிசியோதெரபிஸ்டுகள் இணையும் போது அதன் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்றார்.
Next Story