உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு... தப்பிச்சென்ற மர்ம கும்பல்... தீவிர விசாரணையில் போலீசார்... தூத்துக்குடியில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, உடற்கல்வி ஆசிரியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சுப்புராஜ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுப்புராஜை, மர்ம நபர்கள், ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்