அமேசான், கூகுள், டிவிட்டர் வரிசையில் ஃபிலிப்ஸ் - 6,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்
நெதர்லாந்தை சேர்ந்த மருத்துவத் துறை டெக் நிறுவனமான ஃபிலிப்ஸ், உலகெங்கும் ஆறாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
130 ஆண்டுகள் பழமையான ஃபிலிப்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் நுகர்பொருட்களில் கொடிக்கட்டி பறந்தது.
தற்போது ஆக்சிகன் கான்சென்ட்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மின் விளக்குகள், கார் விளக்குகள், வேக்கியூம் கீளினர்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்பொருட்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த அக்டோபரில் 4 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய ஃபிலிப்ஸ், இன்று மேலும் ஆறாயிரம் பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
உலகெங்கும் சுமார் 81 ஆயிரம் ஊழியர்களை கொண்ட ஃபிலிப்ஸின் விற்பனை அளவு சரிந்துள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அமேசான், கூகுள், டிவிட்டர் வரிசையில் ஃபிலிப்ஸ் - 6,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்அமேசான், கூகுள், டிவிட்டர் வரிசையில் ஃபிலிப்ஸ் - 6,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம், டிவிட்டர், மைக்ரோசாப்ட், ஹெவ்லெட் பேக்கார்ட் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில், பெரும் எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்துள்ளது ஒப்பிடத்தக்கது.