ஃபைசர் நிறுவன சிஇஓ-க்கு 4 டோஸ் தடுப்பூசி செலுத்தியும், 2வது முறை கொரோனா பாதிப்பு
ஃபைசர் நிறுவன சிஇஓ-க்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள ஆல்பர்ட் போர்லா, அறிகுறி ஏதும் இல்லை என்றும், நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் தொற்று பாதித்து 3 மாதங்கள் நிறைவடையாததால், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதல் படி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்முறையாக தொற்றால் பாதிக்கப்பட்ட போது, 4 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததாக ஆல்பர்ட் போர்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story