திமுக மாஜி நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தி.மலையில் பரபரப்பு
திருவண்ணாமலையில் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்தவர் சாவல்பூண்டி சுந்தரேசன். சமீபத்தில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.வே.கம்பன் ஆகியோருக்கு எதிராக பேசியதால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சாவல்பூண்டி சுந்தரேசனின் கார் மீது, சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எரிக்க முயன்றுள்ளனர். இதில் அவரது காரின் பின்பக்கம் சேதம் அடைந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்த சாவல்பூண்டி சுந்தரேசன், தனக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story