அசைவ உணவு சாப்பிடும் தாய்மாரின் பாலில்.. பூச்சிக்கொல்லி மருந்து - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

x

உத்தரப்பிரதேசத்தில், 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த‌தற்கு தாய்ப்பாலில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து காரணம் என தெரிய வந்துள்ளது.

மகாராஜ்காஞ்ச் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கான காரணங்கள் குறித்து, லக்னோவை சேர்ந்த குயின்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். 130 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களது தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதாலும், கால்நடைகளுக்கு ரசாயண ஊசி செலுத்தப்படுவதாலும், தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவு சாப்பிடுவோரை விட, அசைவ உணவு சாப்பிடுவோரின் தாய்ப்பாலில் 3 மடங்கு அதிகமாக நச்சு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3 நபர்கள் கொண்ட விசாரணை குழு அமைத்து மகாராஜ்காஞ்ச் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்