BREAKING || "தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?" பெரியார் பல்கலை தேர்வில் கேள்வி
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில், சாதி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் பல்கலை.யில் முதுகலை எம்.ஏ. வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில், தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் நடந்த சிறப்பு தேர்வில், சாதி குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 4 சாதிகளை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story