தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள் இன்று..!

x

1909 செப்டம்பர் 15இல் காஞ்சிபுரத்தில், ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை, பள்ளிக் கல்வியை பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில் முடித்தார்.

1934இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் பொருளாதாரம் மற்றும் அரசியலில் எம்.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

பின்னர் பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசியராக சில காலம் பணியாற்றினார். பின்னர் ஆசியர் பணியில் இருந்து விலகி, பத்திரிகை துறையிலும், அரசியலிலும் ஈடுப்பட்டார். நீதிகட்சியில் இணைந்தார். நீதிகட்சியின் பத்திரிக்கையான ஜஸ்டிஸ் இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.

1935ம் ஆண்டு திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் அண்ணா. அதன் பிறகு பெரியாரின் தொண்டரானார். 1937இல் ஈரோடு சென்ற அண்ணா, அங்கு பெரியாரின் குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

1938இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார். இந்திய விடுதலை மற்றும் தேர்தல் அரசியலை நிராகரித்த பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால், 1949இல் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறி, சகாக்களுடன் சேர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.

கதைகள், நாவல்கள், நாடகங்களை தொடர்ந்து எழுதி, இயக்கி வந்த அண்ணா, திரைபடங்களுக்கும் கதை வசனம் எழுதி பெரும் புகழ் பெற்றார். நல்ல தம்பி,வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி, தமிழ் திரைபட உலகில் முத்திரை பதித்தார்.

சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு,பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு கருத்துகளை திரைபடங்கள் மூலம் பரப்பினார்.

திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். திராவிட நாடு என்னும் இதழை நடத்தினார். 1957 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார். 1962இல் மாநிலங்களவை உறுப்பினரானார்.

1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து, ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக தொடர வகை செய்தார். 1967 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின், தமிழக முதல்வரானார். மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். 1968இல் சென்னையில் உலக தமிழ் மாநாட்டை நடத்தினார்.

1969இல் புற்று நோய் காரணமாக, 60 வயதில் காலமானர்.

தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்திய அறிஞர் அண்ணா காலமான தினம், 1969, பிப்ரவரி 3.


Next Story

மேலும் செய்திகள்