'வாரஸ் பஞ்சாப் தே' தலைவரின் உதவியாளர்கள் கைது... கத்தி, துப்பாக்கியுடன் நீதிமன்றதில் நுழைந்த ஆதரவாளர்கள் - பரபரப்பு
- பஞ்சாபில் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆதரவாளர்கள் துப்பாக்கி கத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பஞ்சாபில், 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் தூஃபனை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மேலும் 2 பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் அஜ்னாலாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அப்போது, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை அவர்கள் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
- அவர்கள் கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவை வைத்திருந்ததால், அங்கிருந்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்குள் ஓடினர்.
- இதையடுத்து காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- இதே போன்று, அஜ்னாலா நீதிமன்றம் முன்பும் ஏராளமானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story