மக்களுக்கு விரைவில் சூரிய ஒளியில் எரியும் அடுப்புகள்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆய்வு செய்தார். அதில்,பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய அவர், நரேந்திர மோடி பிரதரமான பிறகு சமையல் எரியாவு இணைப்புகள் எளிதாக கிடைப்பதாக கூறினார். இந்தியன் ஆயில் நிறுவனம் மூலமாக விரைவில் சூரியஒளி அடுப்புகள் வருவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளையும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளையும் வழங்கினார்.
Next Story