சாக்கடை நீரை வெளியேற்றுவது குறித்த விவகாரம்.. ராணுவத்துக்கு சொந்தமான மதில் சுவரை துளையிட்ட மக்கள்

x

சென்னை பரங்கிமலையில், சாக்கடை நீரை வெளியேற்றுவது தொடர்பாக, ராணுவத்தினருடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பூந்தோட்டம் பகுதியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான காலி இடத்துக்குள் சாக்கடை நீர் நுழைவதை தடுக்கும் வகையில், மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சாக்கடை நீர் வெளியேறாமல் தெருக்களிலேயே தேங்கி நிற்பதுடன், நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனால், பொதுமக்கள் சேர்ந்து மதில் சுவரில் சுளையிட்டு சாக்கடை நீரை வெளியேற்ற முயற்சித்த போது, ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்