"அது எப்படிங்க சாமி எங்க தெரு பக்கம் வராம போகலாம்" - வாகனத்தை சிறைப்பிடித்த மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம், தீம்பிலாங்குடி மஹாதேவர் ஆலய ஊர்வலத்தின் போது, அலங்கார வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த மாதம் 29-ஆம் தேதி, இந்த ஆலயத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம், ஆறாட்டு வைபவம் நடைபெற்றது. மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக அலங்கார வாகனங்களின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பொன்மனை பகுதியில், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாகக் கூறி அலங்கார வாகனங்கள் அவ்வழியாக செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர். பின்னர், ஆலய நிர்வாகம் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
Next Story