ஊட்டிக்கு செல்லும் மக்களே.. ஒருமுறை கிளிகள் பூங்கா பாருங்க... அசந்து போவீங்க...

x

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கிளிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட பறவைகள் பூங்காவில், மெக்கவ், சன் கன்யூர் வகை கிளி உள்பட பல்வேறு வண்ண கிளிகள், மேண்டஸ் வாத்து, தையோகா வாத்து, பின்சஸ் குருவிகள், கலிபோர்னியா காடைகள், பறக்கும் அணில் உள்ளிட்ட பறவைகள் வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களுடன் சகஜமாக பழகும் கிளிகள், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது அமர்ந்து விளையாடுகின்றன. முன்னதாக, சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கிளிகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்