சமாதானமான DKS..CM-ஆன சித்தராமையா..பாகுபலியாய் எழுந்த DKS..பல்வாள் தேவனாக நின்ற சித்தராமையா
- கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- காங்கிரசில் யாருக்கு முதல்வர் பதவி என்பது தொடர்பாக, சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
- 135 எம்.எல்.ஏ.க்களில் 80-க்கும் மேற்பட்டோர் ஆதரவு சித்தராமையாகவுக்கு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ் மேலிடம்...
- 4 நாட்கள் இழுபறிக்கு பிறகு விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட டி.கே. சிவகுமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
- பெங்களூருவில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- இதன் தொடர்ச்சியாக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும், ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
- அதன்படி கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வர் சித்தராமையாவுடன், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸ் அமைச்சரவையும் பதவியேற்றது.
- அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- விழாவில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, மு.க.ஸ்டாலின், சரத்பவார், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே, நிதிஷ்குமார், காங்கிரஸ் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சுவ்விந்தர் சிங் சுகு மற்றும் தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
- பதவி ஏற்பு விழா முடிந்ததும், காங்கிரஸ் அறிவித்துள்ள இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, பெண்களுக்கு இலவச பயணம்,
- 200 யூனிட் இலவச மின்சாரம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களில் சித்தராமையா கையெழுத்திட்டார்
Next Story