வீடுகளை இழந்தவர்களை பார்க்க மாஸாக சென்ற பவன் கல்யாண் செயலால் கடுப்பான ஆந்திர போலீஸ்
தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், திரைப்பட பாணியில் ஆதரவாளர்களுடன் காரின் மேல் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இப்பவட்டம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்காக இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் வீடுகள் இழந்தவர்களை நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பார்க்க சென்றார். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர, காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு சினிமாவை போல் பவன் கல்யாண் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பவன் கல்யாணின் செயலால் கடுப்பான போலீசார், அவரை தடுக்க முயன்றனர்.
Next Story