மூன்றாவது அட்டெம்ப்டிலும் பாஸ்... சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது..?

x

சந்திரயான்-3 விண்கலத்தை 3-வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான்-3

கடந்த சில நாட்களுக்கு முன்பாக.... முதல் சுற்று பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டது.

திங்களன்று இரண்டாவது சுற்று பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்தது.

அப்போது குறைந்தபட்சம் 226 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 41,603 கி.மீ. தொலைவும் கொண்ட புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத் தப்பட்டது.

இந்த நிலையில் , நேற்று(18-7-23) மாலை 3 மணியளவில் மூன்றாவது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை நாளை ( ஜூலை 20ஆம் தேதி) பிற்பகல் 2 முதல் 3 மணிக்குள் செய்யவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ன ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்