"மிட் நைட் பார்ட்டியில் நடந்ததை பார்த்துட்டேன்" - நடிகை பார்வதி நாயர் மீதான புகார் உண்மையா?
நடிகை பார்வதி நாயரின் அந்தரங்க விஷயத்தை சொல்லி விடுவேனோ என்கிற பயத்தில், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரின் உதவியாளராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகை பார்வதி நாயர் கடந்த மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக் கடிகாரம், லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவற்றை திருடிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தன் மீது பொய் புகார் சுமத்தப்படுவதாக சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சுபாஷ் மீதான புகாரில், துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி கடந்த வாரம் பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அப்போது சுபாஷ் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் பார்வதி நாயர் முன்வைத்திருந்தார்...
இதை எல்லாம் மறுத்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ், பார்வதி நாயர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை பார்வதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தான் அளித்த புகார் தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், திருட்டு வழக்கில் தன் மீது போலீசாரால் போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை முற்றிலும் பொய்யானவை எனவும், நேரம் வரும் போது தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிட உள்ளதாகவும் சுபாஷ் சந்திர போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.