யூடியூபில் பகுதி நேர வேலை! - ரூ.92 ஆயிரம் கட்டி மோசம் போன பட்டதாரி பெண்!
- சென்னையில் ஆன்லைனில் வேலை தேடிவந்த பெண்ணை ஏமாற்றி, அவரின் வங்கி கணக்கில் இருந்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி கும்பல் திருடியுள்ளது.
- போரூர் அடுத்த சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி.
- பொறியியல் பட்டதாரியான இவர், வேலை வாய்ப்புக்காக தனது விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.
- இந்நிலையில், ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாகவும், யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும் பகுதிநேர வேலை இருப்பதாகவும் கூறி பிரியதர்ஷினியை தொடர்பு கொண்டுள்ளனர்.
- இதற்காக, முதலில் 1000 அனுப்பினால் ஆயிரத்து முன்னூறு ரூபாயாகவும், ஐந்ததாயிரம் கொடுத்தால் ஆராயிரம் ரூபாயாகவும் பெறலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- அவர்கள் கூறியது போலவே பிரியதர்ஷினி பணம் அனுப்பிய நிலையில், கடைசியாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் தான் மொத்த பணமும் திரும்பி வரும் என கூறியுள்ளனர்.
- இவ்வாறு, பிரியதர்ஷினியின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 92 ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
- இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்
Next Story