சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம் ..'பாரத்' Vs 'இந்தியா' 'பாரத்' - 'ஜிதேகா பாரத்'

x

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது அடுத்து, பாரதிய ஜனதாவை குறிக்கும் வகையில் 'பாரத்' என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகிறார்கள், பாஜக தலைவர்கள். இந்நிலையில், பாஜகவின் இந்த 'பாரத்' தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் கட்சிக்கான டேக்லைனை எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, நேற்று இரவு நடந்த விரிவான ஆலோசனைக்கு பிறகு... தங்களை அடையாளப்படுத்தும் கோஷமாக 'ஜிதேகா பாரத்' அதாவது இந்தியா வெல்லும் என்ற டேக்லைனை எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியில் பெயர் வைக்க மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதை அடுத்து, 'ஜிதேகா பாரத்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்