1947 டூ 2023: மொத்த நாடும் இனி சோழர் கீழே..!..சென்ட்ரல் விஸ்டாவில் தமிழக செங்கோல் - மீளும் பிரம்மாண்ட வரலாறு

x

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்... இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற கட்டுமானம் குறித்த நேரத்தில் நடைபெற்று சாதனை படைத்துள்ளதாகவும், கட்டுமான பணியில் ஈடுபட்ட 40 ஆயிரம் பணியாளர்களையும் பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோழர் கால மாதிரியாக செய்யப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார். சோழர்களின் சாம்ராஜ்யத்தில் இருந்து செங்கோல் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்வதாக தெரிவித்த அமித்ஷா, புதிய நாடாளுமன்றம் இந்தியாவின் வளமையான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் எனவும், இந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதை விட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். ஐதராபாத் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செங்கோல் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டு மக்களிடம் வழங்கப்பட்ட அதிகார மாற்றத்திற்கான அடையாளமாகத் திகழ்வதாக அமித்ஷா குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்