அடிக்கடி சண்டை போட்ட பெற்றோர்.. "வெளியே தலைகாட்ட முடியவில்லை".. மார்பில் குத்தி மகன் தற்கொலை
குன்றத்தூரில் பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வது தலைகுனிவை ஏற்படுத்துவதாக கூறி கத்தியால் குத்தி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அடுத்த இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்.
இவரின் மகன் பாலகிருஷ்ணன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் ஏற்பட்ட தகராறில் மிகவும் மன முடைந்த பாலகிருஷ்ணன், நீங்கள் இவ்வாறு அடிக்கடி தகராறிட்டு கொள்வதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என கூறி கத்தியால் மார்பில் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story