"யார் எங்களை காப்பாற்ற போகிறார்கள் என தெரியவில்லை" - பரந்தூர் கிராம மக்கள் வேதனை

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி மேம்பாட்டுக்கான சர்வதேச ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு கோரியுள்ள நிலையில், இதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் நான்காயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்திருந்ததன் படி, பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் அறிவிப்பு வெளியானது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், மேலேறி, நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 132 வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களிடம் கருத்து கேட்காமல் இத்தகையை அறிவிப்பை வெளியிடுவது எவ்விதத்தில் நியாயம் என வேதனையுடன் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, வரும் நாட்களில் தங்களது போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்