"நாயகன் மீண்டும் வரார்..." - வெறித்தன கம்பேக் கொடுத்த பண்ட் - இங்கிலாந்தை கதறவிட்ட ஆட்டம்..!
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு, ஆண்டன்சன் கடும் நெருக்கடி கொடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தொலைத்த இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 5வது சதமாக பதிவானது. இதனை தொடர்ந்து ஜடேஜா 109பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேரடி முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது.