"தப்பு பண்ணா நாம தப்பிக்கணும்.. சும்மா பயந்திட்டு இருக்க கூடாது.." - தீயாய் பரவும் ஆடியோ

x
  • பண மோசடியில் ஈடுபட்டு சிக்கிய ஊராட்சி மன்ற செயலாளர் அதனை சமாளிப்பது தொடர்பாக, பெண் ஒருவரிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • திருப்பத்தூர் மாவட்டம் ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி பணம் 10 ஆயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜிடம் அளித்துள்ளார்.
  • கோவிந்தராஜ் ஊராட்சியில் பணிபுரியும் பெண் மூலமாக ஆயிரம் ரூபாயை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.
  • பணம் செலுத்தியதற்கான ரசீதில் ஆயிரம் ரூபாய் என்பதை, 10 ஆயிரம் ரூபாய் என மாற்றி கோவிந்தராஜ் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
  • ரசீதை பார்த்து சந்தேகமடைந்த ஊராட்சி மன்ற தலைவர், வங்கிக்கு சென்று செலுத்தப்பட்ட பணம் குறித்து விசாரித்துள்ளார்.
  • இந்தநிலையில் பண மோசடியில் ஈடுபட்டதை சாமளிப்பது பற்றி கோவிந்தராஜ், ஊராட்சியில் பணிபுரியும் பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்