"பணம் கொடுத்தாதான் வேலை..."லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர்- வைரல் காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நெல்கட்டும்செவல் பஞ்சாயத்தில், பணித்தள பொறுப்பாளராக பணிபுரியும் பெண்களிடம், ஊராட்சி செயலாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணிபுரியும் பெண்கள், தொடர்ந்து வேலை செய்ய, அவர்களிடம் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணம் வாங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஊராட்சி செயலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்