பெட்ரோல் குண்டுகள் வீசி.. சரமாரியாக வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை - நடு நடுங்க வைக்கும் சம்பவம்
பெட்ரோல் குண்டுகள் வீசி.. சரமாரியாக வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை - நடு நடுங்க வைக்கும் சம்பவம்
சென்னை அருகே ஊராட்சி மன்றத் தலைவர், நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி தலைவராக வெங்கடேசன் என்பவர் வெற்றி பெற்றார். அவரும், வார்டு உறுப்பினர் சத்யாவும் மாடம்பாக்கத்தை அடுத்த ஆதனூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று மூன்று நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசியது. வெங்கடேசன் கீழே இறங்கி ஓடியபோதும், பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓராண்டுக்கு முன்பாக, கொலை முயற்சியில் இருந்து தப்பிய வெங்கடேசன் தற்போது கொல்லப்பட்டுள்ளார்.
Next Story