பக்காவா Plan போட்ட ஊராட்சி மன்ற தலைவி..ஒரே பொய்யை ஊர் முழுக்க சொல்லி மோசடி

x

லெப்பைக்குடிக்காடு அருகே உள்ள பெண்ணக்கோணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி. இவரது மகன் சந்தோஷ்குமார் மற்றும் அவரது மனைவி சிவசங்கரி ஆகிய இருவரும் சென்னையில் ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பணம் கட்டி ஏமாந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் சந்தோஷ்குமாரின் மனைவி சிவசங்கரியை சென்னையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்ற மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சந்தோஷ் குமாரின் தாயார் ஜெயலட்சுமி 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்