ஆத்திரத்தில் கழுத்தை நெறித்த தாய்.. சரிந்து விழுந்து உயிரை விட்ட மகள் - கோபத்தால் பிரிந்த உயிர்

x

திருநெல்வேலியில், காதல் விவகாரத்தில் மகளைக் கொன்று விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த பேச்சி என்பவரது மனைவி ஆறுமுக கனி. இவர்களின் மகளான அருணா, கோயம்புத்தூரில், தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை, அருணா காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஆறுமுக கனிக்கு தெரியவர, அருணாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

வேறொருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாயிடம் அருணா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுக கனி, தனது மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். மேலும், ஹேர் டை மாத்திரைகளை சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆறுமுக கனியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்