பழனி கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதாக புலிப்பாணி சுவாமி அறிவிப்பு
உரிய மரியாதை அளிக்கப்படாததால், பழனி கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணிக்கப் போவதாக பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமி தெரிவித்துள்ளார். அவரும், இந்து முன்னனியின் மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது, பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை செய்த போகரின் வழிவந்த புலிப்பாணி சுவாமியின் பெயரை அழைப்பிதழில் போடவில்லை என்று காடேஷ்வரா சுப்பிரமணி கூறினார்.
கடைசி நேரத்தில் வேண்டாவிருப்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்.
Next Story