"இகலோக வளத்தை தரக்கூடியவர் வள்ளி"... எந்நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடோடி வரும் முருகப்பெருமான் - பழனி கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
கோவில் மலை மேல் உள்ள ராஜகோபுரம் தங்க விமானம் மற்றும் மேற்புறத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு குடமுழக்கு பெருவிழா காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தில் எட்டாவது கால யாகசாலை பூஜை காலை நான்கு மணிக்கு தொடங்குகிறது.
150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பகுதியில அமைக்கப்பட்டுள்ள 83 வேள்வி குண்டங்களில் வேத மந்திரம் முழங்க வேள்விகளை நடத்துகின்றனர் 108 ஓதுவார்கள் திருமுறை திருப்புகழ் பாடுகின்றனர்.
கும்பாபிஷேக விழாவை நேரில் பார்ப்பதற்கு முன்பதிவு செய்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2000 பேர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 6000 பேர் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர் .