பாக் - நியூசி. கடைசி டெஸ்ட்.. லாஸ்ட் ஓவரில் நடந்த 'டுவிஸ்ட்'

x

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 449 ரன்களும் பாகிஸ்தான் 408 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் 277 ரன்கள் எடுத்து நியூசிலாந்து டிக்ளேர் செய்தது. பின்னர் 319 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. என்றாலும் சர்ஃப்ராஸ் அகமது ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசினார். 118 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி session பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் போராடி சமன் செய்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றி, தோல்வியின்றி முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்