பாகிஸ்தானைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் மக்கி சா்வதேச பயங்கரவாதி - ஐ.நா. அறிவிப்பு

x

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி லாகூரில் சிறையில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான ரஹ்மான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.


அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதுடன், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்து வீடியோ வெளியிட்ட மக்கி, 1980களில் ஐஸ் அமைப்பின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதாகவும், அங்கு அல்கொய்தா தலைப்வர்கள் மற்றும் ஆப்கான் தளபதிகளை சந்தித்ததாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்...


அல்-கொய்தா அல்லது ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று தெரிவித்த அவர், தான் பின்லேடனை சந்தித்ததே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்