ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்..?
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக, முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள முகமது அமீர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் குடியேறி வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெற உள்ளதாகவும், அதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.
Next Story