93,000 வீரர்களுடன் அடிப்பணிந்த பாக்.... இந்தியாவின் வீர வரலாறு இது!
பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
1971ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைக்காக போரிட்ட இந்தியாவிடம், 93 ஆயிரம் வீரர்களுடன் எந்தவித நிபந்தனையும் இன்றி பாகிஸ்தான் அடிப்பணிந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களின் தியாகத்தால் கிடைத்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியா கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இன்று 51 வது ஆண்டு விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருவதால், டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக பாதுகாப்புப்படை தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி மார்ஷல் விஆர் சவுத்ரி உள்ளிட்டோரும் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்