பொருளாதார நெருக்கடியில் பாக். - பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு
பாகிஸ்தான் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, பணவீக்கம் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது.
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பும் சரியும் நிலையில், ஐ.எம்.எப். கடன் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
இதற்கு ஐ.எம்.எப். வலியுறுத்தும் மானிய கட்டுப்பாடுகளை அமல்பத்த வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டர் 250 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஹை ஸ்பீடு டீசல் 262 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிக்கிதவிக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இதற்கிடையே இந்த கடுமையான சூழலில் பாகிஸ்தானை பாதுகாத்து, வளத்தை தருவது அல்லாவின் பொறுப்பு என பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் கூறியிருக்கிறார்.