கார் விபத்தில் பலியான பாகிஸ்தான் அமைச்சர்
மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த முப்தி அப்துல் ஹக்கூர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியதில், பலத்த காயம் அடைந்த அமைச்சர் முப்தி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல அரசியல் தலைவர்களும் அமைச்சர் முப்தி அப்துல் ஹக்கூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story