காசு இல்லாமல் திண்டாடும் பாகிஸ்தான்..ஏர்போர்ட்டை வாடகைக்கு விட முடிவு..அடுத்து என்ன செய்ய போகிறது..?
அந்நிய செலவாணி கையிருப்பு மிக மோசமடைந்து வருவதால் வேறு வழியின்றி விரைவில் இஸ்லாமாபாத் விமான நிலையத்தை வாடகைக்கு விட முடிவு செய்து இருக்கிறது, பாகிஸ்தான். இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நம் அண்டை நாடான பாகிஸ்தான்.... கடந்த ஓராண்டுக்கு மேலாக
கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், அங்குள்ள கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாடகை விடுவது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
குறிப்பாக கடந்த காலங்களில் கத்தாருடன் இந்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அதிகம் முன்னெடுத்து வந்தது.
இந்நிலையில், முதல் கட்டமாக இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை அவுட்சோசிங் மூலம் 25 ஆண்டு களுக்கு வாடகைக்கு விடுவது தொடர்பான அனைத்து பணிகளும் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள்
முடிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதோடு இந்த மாத இறுதிக்குள், இதற்காக சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை இறுதி செய்யவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக கடந்த 2020ல் இருந்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசின் விமானங்கள் இயக்கப்படுவதில்லை...
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் உலகளாவிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்.... பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு விமானம் இயக்குவது தொடர்பான தர மதிப்பீட்டை ஆய்வு செய்ய இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க முடிக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.