திவால் நிலையில் பாகிஸ்தான்.. ஊசலாடும் பல உயிர்கள்

x
  • பாகிஸ்தான் மருத்துவமனைகளில் கடும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...
  • பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அந்நாட்டின் சுகாதார அமைப்பை மோசமாக பாதித்துள்ளது... அத்தியாவசிய மருந்துகளின்றி நோயாளிகள் சூழல் உருவாகியுள்ளது...
  • நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ உற்பத்தி செய்யவோ முடியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது... மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத கட்டாயத்தில் உள்ளனர்.
  • இதய நோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு அறுவை சிகிச்சைகக்குத் தேவையான மயக்க மருந்துகள் இல்லை...
  • 2 வாரத்திற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன... இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத் துறை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயமும் எழுந்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்