உத்தரபிரதேசத்தில் ஓட்டல்களில் தங்கும் தம்பதியினரை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் சிக்கியது.

x

உத்தரபிரதேசத்தில் ஓட்டல்களில் தங்கும் தம்பதியினரை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் சிக்கியது.

உத்தபிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியினருக்கு அவர்கள் ஓயோ ஓட்டலில் தங்கியிருந்த புகைப்படத்தை மோசடி கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது. தம்பதியை தொடர்புக்கொண்ட கும்பல் பணம் தரவேண்டும் இல்லையெனில் தனிமையில் இருந்த வீடியோ ஆன்-லைனில் வெளியாகும் என மிரட்டியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை கொண்டு விசாரித்த போலீசார் கவுதம் புத்தா நகரில் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் ஓட்டல்களில் அறையெடுத்து தங்குவதையும், அங்கு கேமராக்களை பொருத்திவிட்டு, சில நாட்கள் கழித்து அதே அறைக்கு சென்று வீடியோவை எடுத்து பலரிடம் அட்டகாசம் செய்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 21 செல்போன்கள், 22 சிம்கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இவர்களுக்கு தம்பதியினர் செல்போன் எண் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்