குஜராத் கலவரம், பில்கிஸ் பானு விவகாரம்.."இதுதான் நீங்கள் கற்றுத்தந்த பாடமா?" -அமித்ஷாவை சாடிய ஒவைசி

x

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் கலவரக்காரர்களுக்கு 2002ம் ஆண்டு பாஜக பாடம் கற்பித்துள்ளதாகவும், அதனால் அவர்களால் இதுவரை தலை தூக்க முடியவில்லை என்றும் பேசினார்.

அவரின் இந்த கருத்துக்கு ஓவைசி பதில் கொடுத்துள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அகமதாபாத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓவைசி, 2002ம் ஆண்டு பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், 3 வயது குழந்தையை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்ததன் மூலம், பாஜக நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற வகுப்பு வாத கலவரத்தின் போது பாஜக கற்று கொடுத்த பாடத்தையும் மறக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்