500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் நாசம் - கண்ணீரோடு கதறும் தஞ்சை விவசாயிகள்.
பருவம் தவறி பலத்த காற்றுடன் பெய்த மழையால், தஞ்சாவூர் அருகே சுமார் 500 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள ராராமுத்திரை கோட்டை, புலவர் நத்தம், வாளமர் கோட்டை மாரியம்மன் கோவில் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி சுமார் 2000 ஏக்கருக்கு மேல் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் காற்றால், அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் சாகுபடி, மழை நீரில் விழுந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள்,
உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story