"3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை?" மதுரையில் ஓர் அதிசயம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வழிபாட்டில் இருந்து வரும் நெடுங்கல், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் ஆய்வாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மானுத்து கிராமத்தில் புகழ்பெற்ற பெத்தனசாமி கோயில் வளாகத்தில் வழிபாடுகளுடன் கூடிய நெடுங்கல் உள்ளது. இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்துள்ளனர். 10 அடி மேல் பகுதியிலும், 7 அடி தரை பகுதியிலும் நெடுங்கல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆங்காங்கே, சிதிலமடைந்த நிலையில் பழங்கால எச்சங்கள் கிடைப்பது, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்மே இப்பகுதியில் மக்கள் செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றாக உள்ளது என்றனர்.
Next Story