சிலையாக மாறிய Oscar யானை.. ஊட்டியில் குவிந்த மக்கள்
ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் தொடங்கி வைக்கிறார். சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் 35 ஆயிரம் தொட்டிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. மலர் கண்காட்சியில் முக்கிய அலங்காரமாக தோகை விரித்தாடும் மயில், யானை, வரையாடு, பூங்காவின் 175வது வருடம், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் போன்ற மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நுழைவு கட்டணம் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story