VAO-வை கொலை செய்தவருக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராமசுப்பு என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ராமசுப்புவை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story