சாட்சி கூண்டில் ஏறிய OPS மகன்.. கேள்விகளால் துளைத்தெடுத்த வழக்கறிஞர் - பரபரப்பான ஐகோர்ட்

x

கடந்த 2019 - ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மீண்டும் விசாரித்த நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டிருந்தார். (gfx in 3 )இந்நிலையில், நீதிபதி ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். (gfx in 4 )பின்னர், சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். (gfx in 5)அவரை மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக விளக்கம் அளித்தார். (gfx in 6)இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்