#Breaking|| அன்று ஈபிஎஸ்-க்கு.. இன்று ஓபிஎஸ் மகனுக்கு.. மத்திய அரசு சொல்லும் மெசேஜ் என்ன?
அதிமுக மக்களவை தலைவர் ஓ.பி.ரவீந்திரநாத் என இந்திய நாடாளுமன்ற விவாகர துறை அமைச்சகம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெறும் ஆலோசனையில்
அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிபிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜி20 மாநாடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் கொடுத்தார் அதற்கு பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் அதிமுகவில் இருந்து நீக்கியதால் அதிமுக எம்.பி இல்லையென எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஜீலை மாதம் நாடாளுமன்ற விவகார துறைக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...