#Breaking || "பாஜக போட்டியிட்டால் ஆதரவு" - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி அடுத்தடுத்த காய்களை நகர்த்தி வரும் நிலையில், அதிமுகவில் பல அணிகள் இருப்பதால் குழப்பமே நீடிக்கிறது. இந்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது.
இடைத்தேர்தலில் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக, ஈபிஎஸ் உடன் இப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார். இதுவரை அந்த தரப்பு முன்வராத காரணத்தால் விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என்றும், ஒருவேளை கூட்டணிக் கட்சியான பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரவு கொடுப்போம் எனவும் அவர் கூறினார்.
Next Story