ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட்.. தீர்ப்பை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை
- கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து தனித்தனியாக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- நேற்று முன்தினம் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைக்காததால், நேற்று ஓபிஎஸ் மனு மட்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது தரப்பின் பிற மனுதாரர்களின் சேர்த்து சேர்த்து விசாரிக்க ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்ததால், இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
Next Story