வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்ப்பா? கற்களை வீசி தாக்கும் மர்ம கும்பல்

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கற்களை வீசி தாக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், மேரிபாலம் பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலை அடையாளம் தெரியாத நபர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். ரயிலின் கதவுகள் மற்றும் ஜன்னல் சேதமடைந்த நிலையில் கற்கள் வீசியவர் குறித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்