6 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேர் சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், 6 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Next Story